உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புச்சுவரின்றி மஞ்சள்நீர் கால்வாய்

தடுப்புச்சுவரின்றி மஞ்சள்நீர் கால்வாய்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் வடக்கு பகுதி, பல்லவர்மேடு மேற்கு பகுதி, ஒ.பி.குளம் தெரு இணையும் மும்முனை சாலை சந்திப்பு பகுதியில், சாலையோரம் மஞ்சள்நீர் கால்வாய் செல்கிறது.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில், சாலையோரம் உள்ள மஞ்சள்நீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை.இதனால், பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து ஒ.பி., குளம் தெருவிற்கு செல்ல வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது, தடுப்புச்சுவர் இல்லாத பகுதி வழியாக மஞ்சள்நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.இதே நிலை, ஒ.பி., குளம் தெருவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும் உள்ளது. எனவே, மும்முனை சந்திப்பு சாலையோரம் உள்ள மஞ்சள்நீர் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் முழுமையாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்