மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
மர்ம காய்ச்சல் பாதித்து மருத்துவ மாணவி பலி
19-Sep-2025
நாகர்கோவில்:கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்து விட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திடல்பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் 37. இவருக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதி ஷெரின் சரத்ராஜ், மஞ்சு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த தம்பதி அரசு வட்டாரத்தில் பலரை நன்றாகத் தெரியும் என்பதால் ராஜகோபாலுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினர்.கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ராஜகோபாலிடமிருந்து அந்த தம்பதி பணத்தை வாங்கினர். வேலை கிடைக்காததால் ராஜகோபால் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு போலி நியமன ஆணையை வாட்ஸ் அப்பில் தம்பதி அனுப்பினர். மேலும் தபாலில் ஒரிஜினல் ஆர்டர் வரும் என்றும் தெரிவித்தனர். ஆனால் தபாலிலும் எந்த ஆணையும் வரவில்லை.இதையடுத்து ராஜகோபால் தம்பதியை தொடர்பு கொண்ட போது அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தூத்துக்குடியில் அவர்கள் தந்த முகவரியிலும் இல்லை. ராஜகோபால் எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் ஊட்டியில் தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்தனர்.
24-Sep-2025 | 1
20-Sep-2025
19-Sep-2025