மேலும் செய்திகள்
கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
19-Dec-2025
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு, சுற்றுலா பயணியர் படகில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு 75 ரூபாய் கட்டணம். வரிசையில் நிற்காமல் செல்ல, சிறப்பு கட்டணமாக, 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.கன்னியாகுமரியிலிருந்து 6.5 கடல் மைல் தொலைவில், வட்டக்கோட்டை சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோட்டை, திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது.கடந்த ஆண்டு மே 24 முதல் கன்னியாகுமரி - வட்டக்கோட்டை இடையே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக, திருவள்ளுவர் மற்றும் தாமிரபரணி என்ற இரண்டு படகுகள் இயக்கப்பட்டன. இதில், 'ஏசி' இருக்கைகளுக்கு, 450 ரூபாய், சாதாரண இருக்கைகளுக்கு, 350 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால், பயணியர் ஆர்வம் காட்டவில்லை.சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், 20 நாட்களாக இந்த படகுகள் கன்னியாகுமரி படகு துறையில், கட்டி வைக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை குறைத்து இயக்கினால் பயணியர், அதிக எண்ணிக்கையில் வருவர் என்று, சுற்றுலா ஆர்வலர்கள் கூறினர்.
19-Dec-2025
18-Dec-2025