பாலியல் தொல்லை ஆசிரியர் கைது
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் முதல்வரிடம் புகார் அளித்தனர்.நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராமச்சந்திர சோனியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.