உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது

திருவோண கொண்டாட்டம் எளிமையாக தொடங்கியது

நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனையில் திருவோணத் திருவிழா எளிமையாக தொடங்கியது. ஆவணி மாதம் ஹஸ்தம் நாள் தொடங்கி 10 நாட்கள் திருவிழா களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக கேரள மாநில அரசு ஓண கொண்டாட்டத்தை ரத்து செய்தது. எனினும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா எளிமையாக தொடங்கியது.அரண்மனை வளாகத்தில் ஊஞ்சல் கட்டி ஊழியர்களும், சுற்றுலா பயணிகளும் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். செப்., 15- திருவோணம் பண்டிகையாகும்ஓணம் பண்டிகை தொடக்கம், விநாயகர் சதுர்த்தி காரணமாக நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ பிச்சிப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதுபோல வண்ண பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. ஆனால் கேரளாவில் ஓண கொண்டாட்டம் இல்லாததால் அங்கிருந்து பூ வாங்க அதிகம்பேர் வரவில்லை. வியாபாரம் மந்தமாகவே இருந்தது என ியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை