உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மண்டைக்காட்டில் கோஷ்டி மோதல் 10 பேர் காயம்; 30 பேர் மீது வழக்கு

மண்டைக்காட்டில் கோஷ்டி மோதல் 10 பேர் காயம்; 30 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்,: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே புதூர் மீனவ கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மண்டைக்காடு அருகே புதூர் சி.ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜூக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஆன்றனிக்கும் இடையே தேவாலய திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்விரேதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள குருசடி அருகே ஸ்டீபன் மற்றும் ஆன்றனி தரப்பினர் 50 க்கும் மேற்பட்டோர் கூடினர்.இரு தரப்பினர்களிடையே மோதலாக மாறியது. ஆண்கள், பெண்கள் என கூட்டாக ஒருவருக்கொருவர் அரிவாள், கம்பி,கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாறி மாறி மோதிக்கொண்டனர். படுகாயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை