உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அகல் விளக்கு ஏந்தி போராட்டம்

அகல் விளக்கு ஏந்தி போராட்டம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே கடந்த 15ல் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கொடுத்த புகாரில், 40 பேர் மீது எஸ்.சி., - எஸ்.டி., சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பலர் இருந்ததால், அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.எனவே, வழக்கை ரத்து செய்யக்கோரி தாழக்குடி சந்திப்பில் நேற்று, 300க்கும் மேற்பட்ட பெண்கள் அகல் விளக்கு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை வாபஸ் பெறும்வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை