உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / காதலியை தருவதாக அழைத்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்

காதலியை தருவதாக அழைத்து வாலிபர் மீது கொடூர தாக்குதல்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கடையாலமூட்டையை சேர்ந்தவர் மது; கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமலதா, 35; மாற்றுத்திறனாளி. காரோடுபொட்டவிளையை சேர்ந்தவர் சதீஷ், 40; கிணறு வெட்டும் தொழிலாளி. வேலைக்கு செல்லும் இடத்தில் மதுவுக்கும், சதீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மது வீட்டிற்கு சதீஷ் சென்று மது அருந்துவது வழக்கம். இதில், சுமலதாவுக்கும், சதீஷுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில், மதுவின் சகோதரரான சஜி, 23, சதீஷுக்கு போன் செய்து, சித்தி சுமலதாவை, படப்பச்சை என்ற இடத்துக்கு வந்தால் அழைத்துச் செல்லலாம் என, கூறினார்.அதை நம்பிய சதீஷ், நண்பர்கள் மூன்று பேருடன் அங்கு சென்றார். அப்போது, மதுவின் சகோதரர்களான பிரசாத், வீரமணி, சஜி, விவேக் ஆகியோர் சதீஷை தாக்கினர். இந்த களேபரத்தில் அங்கிருந்து தப்பிய சதீஷ் நண்பர்கள் அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சதீஷை மீட்ட போலீசார், பிரசாத், வீரமணி, சஜி ஆகியோரை கைது செய்து, தப்பிய விவேக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை