கப்பல் மோதி மூழ்கிய படகு மீனவர்கள் மீட்பு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்தவர் பனிஸ். இவருக்கு சொந்தமான படகில் ஐந்து நாட்களுக்கு முன், 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் மோதி படகு கடலில் மூழ்க துவங்கியது. அப்போது, அவ்வழியாக வந்த மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்த, 9 மீனவர்களையும் காப்பாற்றி குளச்சல் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். மோதியது காமரோஸ் என்ற தீவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் என்பது கடலோர காவல் படை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மோதி விபத்து ஏற்பட்ட பின்னரும் மீனவர்களை காப்பாற்றாமல் கப்பல் சென்றுள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.