மேலும் செய்திகள்
நீச்சல் குளத்தில் மூழ்கி கொடை வாலிபர் பலி
16-Nov-2025
டூ - வீலரில் உரசிய லாரி 2 பேர் பலி
15-Nov-2025
சுசீந்திரம் தெப்பம் சுவர் இடிந்தது
14-Nov-2025
நாகர்கோவில்: கோவில்களில் உண்டியல்களை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே நாராயணபுரத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாவிஷ்ணு கோவில் உள்ளது. மகாபாரத கதையுடன், இக்கோவிலுக்கு தொடர்புள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. நேற்று காலை, பூசாரி கோபகுமார் நடைதிறக்க வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. தகவலில், கோவில் அதிகாரி முத்தமிழ்செல்வன், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். நகை திருட்டு கிரு ஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே, பீமனப்பள்ளி கிராமத்தில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த வெங்கடரமணப்பா, 70, என்பவர் பூசாரியாக உள்ளார். நவ., 22 இரவு, 8:00 மணிக்கு கோவிலை பூட்டி, வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் கோவிலை திறக்க வந்த போது, கதவு திறந்து கிடந்தது. அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போ து, அம்மன் கழுத்தில் இருந்த, 80,000 ரூபாய் மதிப்புள்ள நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியல் காணிக்கை ஆகியவை திருடு போயிருந்தன. பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Nov-2025
15-Nov-2025
14-Nov-2025