உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பகவதி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு பணம் வசூல்: அதிகாரிகள் விசாரணை

பகவதி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு பணம் வசூல்: அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்; கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தரிசனத்திற்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் வெளிநபர் ஒருவர் பண வசூலில் ஈடுபடுவது வைரலானதையடுத்து தேவசம்போர்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர். காலையில் சூரிய உதயத்துக்கு பின் நீண்ட வரிசையில் காத்திருந்து இவர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வரிசையில் நிற்காமல் அழைத்து செல்வதற்காக சிலர் பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு வந்தவர்களிடம் வெளிநபர் ஒருவர் பணம் வாங்குவதும், அதுபோல அலைபேசி செயலி மூலம் பணம் வாங்குவதும் சமூகவலை தளங்களில் வைரலானது. இவர் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரியின் டிரைவர் என சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இந்த சர்ச்சையை மறுத்த தேவசம்போர்டு அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி