உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / விபத்தில் மாணவர்கள் பலி டிரைவர் கைதால் போராட்டம்

விபத்தில் மாணவர்கள் பலி டிரைவர் கைதால் போராட்டம்

மார்த்தாண்டம் : நான்கு மாணவர்கள் பயணித்த பைக், பஸ் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி, சாமியார்மடம் அருகே காட்டாதுறை கஞ்சிமடம் பகுதியை சேர்ந்தவர்கள் சஜித், 16, அப்சல், 17, அஜ்மல், 16, நாசில், 15. நண்பர்களான இவர்கள், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் -1, பிளஸ் 2 மாணவர்கள். குழித்துறையில் நடைபெறும் வரவுபலி பொருட்காட்சியை நேற்று முன்தினம் இரவு பார்த்துவிட்டு, நால்வரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கல்லுத்தொட்டி பகுதியில் வந்த போது, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டத்துக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த அப்சல், அஜ்மல் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சஜித், நாசில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அரசு பஸ் டிரைவர் ராஜேஷை, மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று படந்தாலுமூடு அரசு பஸ் டெப்போவில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ