உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி /  போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

 போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

நாகர்கோவில்: ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்றார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாதிரி குளத்தின் கரையைச் சேர்ந்தவர் மல்லிகா 34. இவர் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கடை நடத்தி வருகிறார். அருகில் கடை நடத்தும் மற்றொருவர் இவரது கடைக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் மல்லிகாவின் கடை தெரியாமல் இருக்கும் அளவு பேக்குகளை அடுக்கி வைத்துள்ளார். இது தொடர்பாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் மல்லிகாவை திட்டியதாக கூறி தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மல்லிகா, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றினார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை காப்பாற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ