மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் கேட் வால்வு அமைக்கும் பணி
28-Jan-2025
மேட்டு மகாதானபுரத்தில் விஷ வண்டுகளால் மக்கள் அச்சம்கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம், மகாலட்சுமி கோவில் வளாகம் செல்லும் வழியில் விஷவண்டுகளால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகே மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவில் வழியாக செல்லும் சாலையில் மக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கு பகுதி சாலை அருகே முள் செடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த புதரில் விஷவண்டுகள் கூடு கட்டி வசித்து வருகின்றன. அந்த வழியாக மக்கள் நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்லும்போது, விஷவண்டுகள் பறந்து வந்து அச்சுறுத்துகின்றன. விஷமுள்ள இந்த விஷவண்டுகள் கடித்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், முள் புதர்களை அகற்றி, விஷவண்டுகளை அழிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Jan-2025