தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்
தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்கரூர்:கரூர் அருகே, வீட்டில் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி சாலை புதுார் பகுதியை சேர்ந்தவர் மரியா கிரேசி, 61; பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த, 20 இரவு, 25 வயதுடைய அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜூஸ் கேட்டுள்ளார்.அப்போது, கடையில் மரியா கிரேசி, ஜூஸ் போடும் போது, வீட்டுக்குள் நைசாக நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.இதுகுறித்து, மரியா கிரேசி அளித்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.