தென் மண்டல அளவிலான கைப்பந்துஅரவக்குறிச்சி மாணவர்கள் மூன்றாமிடம் தென் மண்டல அளவிலான கைப்பந்துஅரவக்குறிச்சி மாணவர்கள் மூன்றாமிடம்
தென் மண்டல அளவிலான கைப்பந்துஅரவக்குறிச்சி மாணவர்கள் மூன்றாமிடம்அரவக்குறிச்சி:தென் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில், அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.தென் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி, சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. ஆறு மாநிலங்களில் இருந்து, 30 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில், கற்பகம் பல்கலைக்கழக அணி முதல் இடத்தையும், வேலுார் விஐடி பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.