மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து 'குட்பை'
06-Feb-2025
அடிக்கடி தற்கொலை முயற்சி எதிரொலிகலெக்டர் அலுவலகத்தில் கெடுபிடிகரூர்:கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், அடிக்கடி தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடப்பதால், கடும் சோதனைக்கு பின் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில், திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், தொடர்ந்து தீக்குளிப்பு முயற்சி நடந்து வருகிறது. இதனால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடும் சோதனைக்கு பின், மனு கொடுக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் கொண்டு வந்த பைகள், முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அரசு பணியாளர்கள், தங்களது அடையாள அட்டையைக் காண்பித்த பின், அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிந்தலவாடியை சேர்ந்த அன்னக்கிளி, 41, என்பவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர், தனது பையில் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தார். அதனை பறிமுதல் செய்த பின், நடத்திய விசாரணையில் சொத்து பிரச்னை குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீக்குளிக்க மண்ணெண்ணெய் எடுத்து வந்ததாக தெரிவித்தார். அவருக்கு அறிவுரை கூறி, கலெக்டரிடம் சென்று மனு அளிக்க வைத்தனர்.
06-Feb-2025