மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது
18-Feb-2025
போலியான ஆவணத்துடன்கார் ஓட்டி சென்ற வாலிபர் கைதுகரூர்:கரூர் அருகே, போலியான ஆவணத்துடன் காரை ஓட்டி சென்ற, வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர், தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் மதியம், மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், சம்ரப்பூர் பகுதியை சேர்ந்த உத்தம்குமார், 22, என்பவர் ஓட்டி சென்ற இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காருக்கான பதிவு சான்று போலியானது என தெரிந்தது. மேலும், காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், மூன்று லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து, எஸ்.ஐ., மாரிமுத்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, காரை ஓட்டி வந்த உத்தம்குமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
18-Feb-2025