உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிக்கன நாணய சங்க மாநில ஊழியர் கூட்டம்

சிக்கன நாணய சங்க மாநில ஊழியர் கூட்டம்

கரூர்: 'மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பணியாளர் சங்கங்களுக்கு கடன் வழ ங்க வேண்டும்' என சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாண ய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பணியாளர் கூட்டுறவு சங்ககளுக்கு சிறப்பு கடன் வழங்க வேண்டும், பணியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களின் புதிய ஊதிய ஆணையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் மகாலிங்கன், துணை பொதுச்செயலாளர் பட்டா பிராமன், மாநில துணை தலைவர் மணிவேல், மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் கிருபானந்தன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை