உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் லயன்ஸ் சங்கநிர்வாகிகள் பதவி ஏற்பு

புகழூர் லயன்ஸ் சங்கநிர்வாகிகள் பதவி ஏற்பு

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் 2011-12ம் ஆண்டு புகளூர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் முகமதுரபி புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி பேசினார். மாவட்ட தலைவர் பிரேம் புதிய உறுப்பினர்களை வரவேற்று பேசினார். புகளூர் லயன்ஸ் சங்க 2011-12ம் ஆண்டுக்கு புதிய தலைவர் முத்து, செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, உடனடி முன்னாள் தலைவர் காளியப்பன், முதல் துணை தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர்கள் செந்தமிழரசு, சத்தியமூர்த்தி உறுப்பினர் வளர்ச்சி தலைவர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பிரமணி உட்பட பலர் பதவியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை