உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்கிருஷ்ணராயபுரம்:கண்ணமுத்தாம்பட்டி கிராம சாலையில், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்ணமுத்தாம்பட்டி கிராம சாலையில், பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை சுற்றி அதிகமான களைகள் வளர்ந்து வந்ததால், மரக்கன்றுகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகமான வெயில் அடிப்பதால், மரக்கன்றுகள் சுருங்கி வருகிறது. இதை தடுக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது. இதில் மரக்கன்றுகளை சுற்றியுள்ள களைகளை அகற்றுதல், தடுப்பு அமைத்தல், வெயிலில் இருந்து செடிகளை காப்பதற்காக தண்ணீர் ஊற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை