கரூரில் வக்கீல்கள் நீதிமன்றபுறக்கணிப்பு போராட்டம்
கரூரில் வக்கீல்கள் நீதிமன்றபுறக்கணிப்பு போராட்டம்கரூர்:கடந்த, 2009ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த, 2009ம் ஆண்டு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் வக்கீல்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை, கருப்பு தினமாக ஆண்டுதோறும் வக்கீல் சங்கங்கள் கடைப்பிடித்து வருகின்றன.அந்த வகையில் நேற்று, வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.