உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொக்கம்பட்டி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா

கொக்கம்பட்டி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் விழா

கரூர் : கரூர் மாவட்டம் கொக்கம்பட்டியில் உள்ள பால-கேத்து, பெத்தகேத்து கோவிலில் மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.முதலில் கரூர், திருச்சி, திண்டுக்கல், உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த, 14 மந்-தையர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அழைத்து வரப்பட்ட அனைத்து மாடுகளும் தாரை, தப்பட்டை முழங்க மந்-தையில் இருந்து எல்லைசாமி கோவிலுக்கு ஊர்-வலமாக அழைத்து செல்லப்பட்டன.அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டு, மாடுகளுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அங்கிருந்து, 600-க்கும் மேற்பட்ட மாடுகள் மந்-தையில் உள்ள எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில், முதல் மற்றும் இரண்டாவதாக ஓடி வந்த மாடுகளின் மீது சமூக வழக்கப்படி எலுமிச்சை, கரும்பு பரி-சாக வழங்கப்பட்டது.மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் ஆயிரத்-திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ