உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், விவாதத்திற்கு வைக்கப்பட்ட தீர்மானங்களை இள-நிலை அலுவலர் சரவணகுமார் வாசித்தார். இதில் டவுன் பஞ்., அலுவலகம் எதிரே நிழற்கூடம் அமைப்பில் பந்தல் அமைத்தல், மேட்டு மருதுார் ஆதிதிராவிடர் தெருவில் மயானம் அமைத்தல், பழைய பணிக்கம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் மழைநீர் வடிகா-லுடன் கூடிய சிமென்ட் சாலை அமைத்தல், மயிலாடும் பாறையில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட, 10 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்-வையாளர் பாக்கியம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ