உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிதி உதவி வழங்கியடி.என்.பி.எல்., நிறுவனம்

நிதி உதவி வழங்கியடி.என்.பி.எல்., நிறுவனம்

நிதி உதவி வழங்கியடி.என்.பி.எல்., நிறுவனம்கரூர்:கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில், கோவில்களுக்கு புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமைவகித்தார். சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நடையனுார் நதி நீரேற்றுப்பாசன விவசாயிகள் அமைப்பின், தலைமை நீரேற்று நிலையத்தை மறுசீரமைப்பு செய்திடவும், பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்திட, 3.75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.சுற்றுப்புற கிராமங்களான உப்புப்பாளையம், மேட்டுப்பாளையம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோவில்களுக்கு புனரமைப்பு மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு, 1 லட்சம் ரூபாய், அந்தந்த கோவில் திருப்பணிக்குழு உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை