உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அசுத்தமாக காணப்படும் பஞ்சப்பட்டி நிழற்கூடம்

அசுத்தமாக காணப்படும் பஞ்சப்பட்டி நிழற்கூடம்

கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் மற்றும் கீழ பஞ்சப்பட்டி முடக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள பஸ் பயணியர்களின் நிழற்கூடம் அசுத்தமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப், கீழ பஞ்சப்பட்டி முடக்கு சாலை ஆகிய இரண்டு இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பஸ்களில் ஏறி கரூர், குளித்தலை, மணப்பாறை, தரகம்பட்டி, கடவூர், கீரனுார், கொசூர் பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். நிழற்கூடம் மழை காலங்களில், மக்கள் நிற்பதற்கு வசதியாக உள்ளது.தற்போது அதிகமான குப்பை கழிவு பொருட்கள் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் மழை நீர் தேங்கி மண் அதிகமாக படர்ந்துள்ளது. இதனால் நிழற்கூடத்தில் மக்கள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணியர் நிழற்கூடத்தை துாய்மை செய்து மக்கள் பயன்பாடுக்கு விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை