உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தேர்வு 453 பேர் பங்கேற்பு; 20 பேர் ஆப்சென்ட்

மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தேர்வு 453 பேர் பங்கேற்பு; 20 பேர் ஆப்சென்ட்

கரூர் : கரூரில் நடந்த, தமிழக அரசின் இடைநிலை ஆசி-ரியர் தேர்வில், 453 பேர் தேர்வு எழுதினர். 20 பேர் தேர்வு எழுத வரவில்லை.கரூர், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நி-லைப்பள்ளிகளில், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தேர்வு நடந்தது. இங்கு, கலெக்டர் தங்-கவேல் ஆய்வு செய்த பின், கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், 473 தேர்வர்கள் விண்ணப்-பித்திருந்தனர். இதற்காக மாவட்டத்தில், 2 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள, 25 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. இதில், 453 பேர் தேர்வு எழுதினார். 20 பேர் தேர்வு எழுத வர-வில்லை. தேர்வை கண்காணிக்க, தேர்வு மையம் ஒவ்வொன்றிற்கும் ஒரு முதன்மை கண்காணிப்-பாளர், ஒரு துறை அலுவலர் நியமிக்கப்பட்டுள்-ளனர். தேர்வறை கண்காணிப்பாளர்களாக, 25 ஆசிரியர்களும், சொல்வதை எழுதுபவர்களாக, 2 ஆசிரியர்களும், கூடுதல் அறை கண்காணிப்பா-ளர்களாக, 4 ஆசிரியர்களும், நிலையான படை உறுப்பினர்களாக, 4 ஆசிரியர்களும் நியமிக்கப்-பட்டனர். தேர்வு அறைகளில், 'எல்காட்' மூலம், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆன்லைன் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைமை அலுவலகத்திலும் கண்காணிக்கப்பட்-டது. தேர்வர்களின், ஓ.எம்.ஆர்., தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக தாபல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை