உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை

மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை

குளித்தலை: தென்கரை பாசன வாய்க்கால், மலையப்பன் நகரில் பெரிய பாலம் கட்டவேண்டும் என, தமிழக முதல்வர், எம்.எல்.ஏ., ஆகி-யோருக்கு, அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகர் உள்ளிட்ட பகுதி-களில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடு கட்டும் பணி, விவசாய வேலை உள்ளிட்ட பணிகளுக்கு கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால், மீன்கார தெரு வழியாக குறுகிய சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தென்கரை பாசன வாய்க்கால் இடுகாடு அருகே, சிறிய நடைபாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு பதில் பெரியபாலம் கட்டினால், குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு கனரக வாகனங்கள் சென்று வர ஏது-வாக இருக்கும். எனவே, மலையப்பன் நகரில் பெரிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை