உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரி அ.தி.மு.க., மனு

இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரி அ.தி.மு.க., மனு

கரூர்: இறப்பு மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமென, கலெக்டர் தங்கவேலுவிடம், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலாளருமான விஜய-பாஸ்கர் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்-டத்திற்கு உட்பட்ட, நான்கு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்-களின் பெயர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி தெரியாத-வர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் குறிப்பிட்ட இடத்தில் பல ஆண்டுகளாக வசிக்காதவர்கள், ஒரே நபரின் பெயரில் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது, அதேபோல், திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்ற பெண்களுடைய பெயர்களை, வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது இல்லை. இது தொடர்பாக உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ