| ADDED : ஜூலை 08, 2024 05:27 AM
கரூர் : கரூர் மாநகராட்சி, வையாபுரி நகர், அரவக்குறிச்சி அருகே சி.கூடலுார், தென்னிலையில் உள்ள கிடங்கு ஆகிய இடங்களில், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ஹர் சகாய் மீனா சோதனை மேற்கொண்டார்.இரண்டாவது நாளாக, நேற்று பொது மக்களுக்கு வழங்கக்கூ-டிய அத்தியாவசிய பொருட்களின் தரம், இருப்பு, கைரேகை கரு-விகள் மற்றும் எடை இயந்திரங்களின் செயல்பாடு குறித்து கேட்-டறிந்தார். அத்தியாவசிய பொருட்கள் பெற வருகை தந்த பொது-மக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து கேட்டார்.கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், தமிழ்நாடு நுகர்-பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.