மேலும் செய்திகள்
பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்
14-Mar-2025
பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜைகிருஷ்ணராயபுரம்:வரகூரில் உள்ள, பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூரில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பகவதியம்மன், மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து முத்து பல்லக்கில் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. வரகூர் உள்பட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
14-Mar-2025