மாவட்டத்தில் 8.97 லட்சம் வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிட்ட கலெக்டர்
மாவட்டத்தில் 8.97 லட்சம் வாக்காளர்கள்இறுதி பட்டியல் வெளியிட்ட கலெக்டர் கரூர், : மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், 8.97 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட பின் கூறியதாவது:கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதியில், புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளில், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 734 ஆண்கள், 4 லட்சத்து, 66 ஆயிரத்து, 921 பெண்கள் என மொத்தம், 8 லட்சத்து, 97 ஆயிரத்து, 739 வாக்காளர்கள் உள்ளனர்.கரூர் கலெக்டர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான தகவல், ஆலோசனை மற்றும் புகார்கள் ஆகியவற்றை, 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும், https://voters.eci.gov.in/ அல்லது மொபைல் செயலி மூலமாகவும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவதிஸ்ரீ, கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்