| ADDED : ஜூலை 08, 2024 05:04 AM
கரூர் : கரூர், தெற்கு காந்தி கிராமம், டபுள் டேங்க் அருகே உள்ள சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது, தெற்கு காந்தி கிராமம் செல்லும் முக்கிய சாலை என்பதால், எப்போதும் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். அந்த சாலையில் விநாயகர் கோவில் எதிரே சாலை-யோரம் ஏராளமான காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.முன்னர், இவர்கள் காலை, 10:00 மணிக்கு காய்கறிகளை விற்-பனை செய்து விட்டு சென்று விடுவது வழக்கம். தற்போது கூரை வேய்ந்து நிரந்தரமாக கடைகள் அமைத்து விட்டனர். போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு, காலை நேரத்தில் நடை பயிற்சி செல்பவர்கள், ஓய்வெடுக்க வசதியாக, சிமென்ட் இருக்-கைகள் இருந்தன. அதனை, ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விட்டனர். இதனால், நடைபயிற்சிக்கு செல்லும் முதியவர்கள் அமர முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர குறுகலான சாலையாகி விட்டதால், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்-வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.நெரிசலில் வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள், பாதசா-ரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த, மாநகராட்சி அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.