உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெற ஏற்பாடு

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெற ஏற்பாடு

கரூர், ஆக. 22-கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 'கியூ ஆர்' கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும், ரயில்வே ஸ்டேஷன்களில் சில்லரை பிரச்னைகளை தவிர்க்கவும், நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்கவும், முன் பதிவில்லாத டிக்கெட் வாங்க வசதியாக கியூ ஆர் கோடு வசதி, படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம், நேரடியாக பணம் செலுத்தாமல், முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்தில், 78 ரயில்வே ஸ்டேஷன்களில் கியூ ஆர் கோடு மூலம், பணம் பரிவர்த்தனை செய்து, டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும், கியூ ஆர் கோடு வசதி கடந்த, 19 முதல் செய்யப்பட்டு வருவதாக, ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி