உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வங்கி மேலாளர் மாயம் போலீசில் மனைவி புகார்

வங்கி மேலாளர் மாயம் போலீசில் மனைவி புகார்

கரூர்: கரூரில், தனியார் வங்கி மேலாளரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், செங்குந்தபுரம் விஜய் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவ-ரது மகன் வினோத்குமார், 35; இவர் கரூரில் தனியார் வங்கி ஒன்றின் மேலாளராக பணிபுரிகிறார். இவர் கடந்த, 4ல் காலை வங்கிக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும், வினோத்குமார் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமாரின் மனைவி இந்-துஜா, 33, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை