உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நுாலக கட்டடத்துக்கு பூமி பூஜை விழா

நுாலக கட்டடத்துக்கு பூமி பூஜை விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., குட்டபட்டியில் நேற்று, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நுாலக கட்டடத்திற்கு பூமி பூஜை விழா நடந்தது.யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரன், துணைச்செயலர் பெரியசாமி, அரசு வக்கீல் நீலமேகம், ஒப்பந்த-தாரர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.பஞ்.,செயலாளர் கதிர்வேல், வக்கீல் வேலு, தகவல் தொழில்-நுட்ப பிரிவு பிரவீன், நகர பொருளாளர் தமிழரசன் மற்றும் தி.மு.க.,வினர், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !