உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

சரளை கல் கடத்தியவர் கைது; லாரி பறிமுதல்

அரவக்குறிச்சி : க.பரமத்தி அருகே, சரளை கல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி பறிமுதல் செய்யப்பட்டது.க.பரமத்தி பஞ்சு பிச்சகுட்டை அருகே கனிமவள உதவி புவியியலாளர் சங்கர், 40, தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது, க.பரமத்தி வழியாக வந்த லாரியில், சரளை கற்களை கடத்தி வருவது தெரிய வந்தது. இது குறித்து சங்கர் அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் லாரி ஓட்டுனரான விழுப்புரம் மாவட்டம், கச்சிராபாளையத்தை சேர்ந்த ராஜுவை, 27, கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட இரண்டு யூனிட் சரளை கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி