மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கரூர், : சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில், மூன்று லட்சத்து, 40 ஆயிரத்து, 289 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்பு-துாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்-தோறும் திங்கட்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஏலம் நடக்கிறது, நேற்று நிலக்க-டலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்-றனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். நேற்றைய ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 137 நிலக்கடலை மூட்டை-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 66.60 ரூபாய், அதிக-பட்சமாக, 74.21 ரூபாய், சராசரியாக, 73.21 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,822 கிலோ எடையுள்ள நிலக்கடலை, மூன்று லட்சத்து, 40 ஆயிரத்து, 289 ரூபாய்க்கு விற்பனையானது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025