கரூர்: 'நெல் சாகுபடி குறையும் நிலையில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால், அரிசி விலை உயரும்' என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணி-கர்கள் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது.தமிழகத்தின் நெல் தேவைக்கு, தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து, 48 சதவீதம், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து, 19 சதவீதம் நெல் உற்பத்தி-யாகிறது. மீதமுள்ள, 37 சதவீதம் நெல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வாங்கப்படு-வதன் வாயிலாக பூர்த்தியாகிறது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால் அரிசி விலை உயர்வு தடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விலை கட்டுக்குள் இருப்பதால், ஏற்று-மதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அவ்வாறு தடை விலக்கினால், மீண்டும் அரிசி விலை உயரும்.இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையா-ளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்-களின் சம்மேளன மாநில இணை செயலாளர் வெங்கட்ராமன் கூறியதாவது:கொரோனாவுக்கு பின் இந்தியாவில் அதிக-ளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்-நாட்டில் அரிசி விலை உயர்ந்தது. 2022 முதல் அரிசி ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து அரிசி விலை அதிக-ரித்ததால், 2023ல் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்-டது. புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு, 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், அரிசி விலை கட்டுக்குள் வந்தது.கடந்த, பிப்ரவரியில் அரிசி விலை உயர தொடங்கியதால், பதுக்கல் மற்றும் ஊக வணி-கத்தை தடுக்க, அரிசி மற்றும் நெல் கையிருப்பு விபரத்தை வெள்ளிக்கிழமை தோறும் இ.மெயில் வழியாக வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 45 நாட்களுக்கு மேலாக அரிசி விலை உயராமல் இருக்கிறது. இந்திய உணவுக் கழகத்தில் அரிசி கையிருப்பு போதுமான அளவு உள்ளதால் ஏற்றுமதிக்கு உள்ள தடையை தளர்த்த வேண்டும் என ஏற்றும-தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யவே உணவு கழகத்தில் கையிருப்பில் உள்ள அரிசி பயன்படும். அது வெளிமார்க்கெட்டில் விற்ப-னைக்கு வராது. உலக சந்தையில் தேவை அதிகம் இருக்கும் நிலையில், கட்டுப்பாட்டை விலக்கினால் தடையற்ற வகையில் அரிசி ஏற்-றுமதி செய்யப்படும். இதுமட்டுமல்லாது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பருவ-மழை கை கொடுக்கவில்லை என்றால், சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும். நெல் சாகுபடி கேள்-விக்குறியாகி இருக்கும் நிலையில் ஏற்றுமதிக்கு தளர்வு அளித்தால் கிலோவுக்கு, 5 முதல், 7 ரூபாய் வரை உடனடியாக அரிசி விலை அதிக-ரிக்க வாய்ப்பு உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க கூடாது.இவ்வாறு கூறினார்.