உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி தரம் உயர்ந்தும் பலனில்லை மண் சாலையாக காட்சி அளிக்கும் தெருக்கள்

கரூர் மாநகராட்சி தரம் உயர்ந்தும் பலனில்லை மண் சாலையாக காட்சி அளிக்கும் தெருக்கள்

கரூர் மாநகராட்சி தரம் உயர்ந்தும் பலனில்லைமண் சாலையாக காட்சி அளிக்கும் தெருக்கள்கரூர் ஆக. 21-கரூர், தெற்கு காந்திகிராமத்தில் மண் சாலையாக இருப்பதால், மாநகராட்சியாக தரம் உயர்ந்தும் பலனில்லை என, மக்கள் புலம்பி வருகின்றனர்.கரூர் மாநகராட்சி, தெற்கு காந்தி கிராமத்தில் சக்திநகரில், இந்திரநகர், கே.கே. நகர் உள்பட 20க்கும் மேற்பட்ட நகர்களில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெரும்பாலான தெருக்களில், சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, தெற்கு காந்தி கிராம மக்கள் கூறியதாவது:இங்குள்ள சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலைகளை தவிர மற்ற இடங்களில், இன்னும் சாலை வசதி செய்து தரப்படவில்லை. தற்போது பிரதான சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், குறுக்கு தெருக்கள் மண் சாலையாக இருந்து வருகிறது. மழைக்காலத்தில், சேறும் சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்ல சர்க்கஸ் சாகஸம் நடத்த வேண்டி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. நாள் கணக்கில் மழை நீர் தேங்குவதால் நோய் பரவும் நிலை உள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தார் சாலை, கழிவுநீர் வடிகால் வசதியில்லாமல் உள்ளது. இங்கு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் வரி உயர்வு தவிர எந்த அடிப்படை வசதிகளும் மேம்படவில்லை. வடிகால் வசதி இல்லாததால், தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால், டெங்கு காய்ச்சல் அதிகம் பரவும் பகுதியாக உள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ