குடிநீர் தொட்டியை சுற்றியுள்ள முற்செடிகளால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி கிராமத்தில், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி முள் செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் பிடிக்கும் போது மக்கள் சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுப்பட்டி கிராமத்தில் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு, போர்வெல் மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.தற்போது, தொட்டியை சுற்றி அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் பிடிக்கும் போது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, முள் செடிகளை அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.