| ADDED : ஆக 22, 2024 01:44 AM
கரூர், ஆக. 22-தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டிகளில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.போதி தர்மர் நினைவாக, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி, காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 800க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதி போட்டிகளில், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரூர் புகழூர் பகுதியை சேர்ந்த, 12 மாணவ, மாணவிகள் கட்டா பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றனர்.அதேபோல், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 13 மாணவ, மாணவிகள் கட்டா பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றனர். மேலும் மற்ற பிரிவுகளில், ஒன்பது மாணவர்கள் வெண்கல பதக்கம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டர் ராஜசேகரன், கராத்தே சங்க மாவட்ட செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் பாராட்டினர்.