மேலும் செய்திகள்
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
23-Dec-2025
வயலுாரில் மோசமான சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு
23-Dec-2025
அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி
23-Dec-2025
மனைவி மாயம்; கணவர் புகார்
23-Dec-2025
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்-னிட்டு நேற்று முன்தினம் இரவு சரம் குத்துதல் நிகழ்ச்சி நடந்-தது.கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 7ல் துவங்கியது. கடந்த, 21ல் திருத்தேரில் மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது நேற்று முன்தினம் இரவு சரம் குத்துதல் என்ற வினோத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிச்சம்பட்டி, வளையர்பாளையம் கிராம இளைஞர்கள், 15 அடி உயரமுள்ள ஈட்டியை சொருகிக் கொண்டு கோவில் முன் கூடினர். அங்கு ஆட்டுக்குட்டியின் தலை மீது, பூசாரி மஞ்சள் நீர் தெளித்து வெட்டப்பட்டது. பின், ஆட்டுக்குட்டி தலை வானம் நோக்கி வீசப்பட்டது.அப்போது ஈட்டியுடன் நின்ற இரு கிராம இளைஞர்கள், ஆட்டு தலையை சரம் குத்துதல் மூலம் நிகழ்த்தினர். வளையர்பாளை-யத்தை சேர்ந்த இளைஞர் சரவணன் வெற்றி பெற்றார். பின் அம்-மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், காவிரியில் நீராடி அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்-பட்டது.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025