உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி டி.எம்.எஸ்., நகரை சேர்ந்-தவர் பாசில் உசைன், 39. இவர், பள்ளப்பட்டி தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள சாலையை மறித்தபடி நின்றுகொண்டு, தகாத வார்த்தையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற, மண்மாரி தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்-திரன், 55, டூவீலர் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாஷில் உசேன், இரும்பு ராடால் ரவிச்சந்திரனை தாக்கினார்.இதில், காயமடைந்த ரவிச்சந்திரனை மீட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ரவிச்-சந்திரன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் பாஷில் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 19:58

இதைபற்றி பேச விரும்பவில்லை . அவருகள் பெருவாரியாக இருக்குமிடங்களில் இதுதான் நிலைமை . அவருகள் அதிகமாக வசிக்குக்குமிடங்களுக்குள் நுழைந்தால் குட்டி பாகிஸ்தானுக்குள் நுழைகிற ஃபீலிங்தான் வரும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை