உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் வினோத் குமார் தலைமையில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் முன், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனின் நடவடிக்கைகளை கண்டித்தும், காரணம் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, ராஜபாளையம் பி.டி.ஓ., சத்திய சங்கருக்கு, மீண்டும் பதவி வழங்ககோரியும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் அரசகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ