ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு வரவேற்பு; : ஊராட்சி செயலர்கள் சங்கம்
கரூர்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி வரவேற்றுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்-டத்தை, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வரவேற்கி-றது.அதன்படி, இதுநாள் வரை குடும்ப ஓய்வூதியம் என்பது மறுக்கப்-பட்ட நிலையில், அதற்கான வழிவகையை, மத்திய அரசு ஏற்ப-டுத்தியுள்ளது. 25 ஆண்டு காலம் பணி நிறைவு செய்தவர்களுக்கு, 50 சதவீத ஓய்வூதியமும், அதற்கு குறைவான பணிக்காலத்திற்கு, விகிதாரச்சார அடிப்படையிலும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும், 1.4.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பாராட்டுக்குரியது. தமிழ-கத்தில் கிராம ஊராட்சிகளில், 12 ஆயிரத்து, 525 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளது. 28 ஆண்டுகளாக, அரசு பணி-யாளர்களுக்கான சலுகைகள், ஊராட்சி செயலாளர்களுக்கு இல்லை.தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும், ஊராட்சி செயலாளர்கள் இணைக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசின் ஓய்வூதிய திட்-டத்தை, தமிழக அரசு பணியாளர்களுக்கு பொருந்தும் வகையில், முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.