உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னிலை அருகே சூதாடிய 5 பேர் கைது

தென்னிலை அருகே சூதாடிய 5 பேர் கைது

அரவக்குறிச்சி : தென்னிலை அருகே, குழந்தாபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தாபாளையம் பகுதியில் அஞ்சூர் அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 46, கொடு-முடி அருகே வடக்கு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்-சாமி, 42, கொடுமுடி அருகே ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மணி, 42, முத்துார் அருகே, ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதிராஜ், 42, கொடுமுடி அருகே, பருத்தி கொட்டாம்பா-ளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 47, ஆகிய 5 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. 5 பேரையும், தென்னிலை போலீசார் கைது செய்தனர்.* குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் இரட்டை வாய்க்கால் கரையில் பணம் வைத்து விளையாடுவ-தாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்-தினம், 4:00 மணியளவில் போலீசார் சோதனை நடத்தினர். அப்-போது, முருகானந்தம், 42, குமரேசன், 38, மூர்த்தி, 39, ஆகிய மூன்று நபர்கள் பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ