குளித்தலை : தற்கொலைக்கு துாண்டியதாக, மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.குளித்தலை அடுத்த, சூரியனுார் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பழனியாண்டி, 51. இவரது மகன் ஆனந்த், 29, கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 18 மதியம், 12:00 மணியளவில் ஆனந்த் பைக்கில் சென்றபோது, அதே ஊரை சேர்ந்த கார்த்திக், அவரது நண்பர்கள் சந்திரன், பெரியசாமி ஆகியோர் பைக்கில் மோதுவது போல் வந்தனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பழனியாண்டி, ஆனந்த் இருவரும் வீட்டில் இருந்தபோது, கார்த்திக், சந்திரன், பெரியசாமி ஆகியோர் வந்து, தகாத வார்த்தைகள் பேசி, கையால் அடித்து ஏன் உயிருடன் இருக்கிறாய், துாக்கு போட்டு சாக வேண்டியது தானே என திட்டினர்.அன்று மாலை தன் வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில், அவமானம் தாங்கமுடியாமல் ஆனந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இறப்புக்கு காரணமான கார்த்திக், சந்திரன், பெரியசாமி ஆகியோர் மீது, தந்தை பழனியாண்டி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ், மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்இறந்த ஆனந்திற்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.