உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை ரயில்வே நிலையத்தில் ஆலோசனை குழு கூட்டம்

குளித்தலை ரயில்வே நிலையத்தில் ஆலோசனை குழு கூட்டம்

குளித்தலை ரயில்வே நிலையத்தில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் குளித்தலை ரயில்வே நிலையத்தில் செம்மொழி மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் குளித்தலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும், குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட்டில் ரயில்வே மேம்பாலம் பணி விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், மருதூர் குகை வழி பாதையை காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதுகரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே நிலையத்தில் இன்று மாலை பயணிகள் காத்திருப்பு அறையில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ரயில்வே நிலையம் மேலாளர் ராஜராஜன் தலைமை வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக கரூர் ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் செல்வராசன் கலந்துகொண்டு ரயில்வே துறையின் சிறப்பு திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினார். தொடர்ந்து இந்த பகுதி பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஆலோசனைக் குழு உறுப்பினரும் குளித்தலை நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான கணேசன், பாரத பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்த குளித்தலை. மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்கி, விரைந்து பணி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குதல், மருதூர் ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை பணியை காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுதல், பணியின் போது இரு சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் பட்டவர்த்தி குகை வழி பாதை வழியாக மாற்றுப்பாதை ஏற்படுத்துதல், கரூர் திருச்சி மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்களில் செம்மொழி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் குளித்தலையில் நின்று செல்லுதல், பாலக்காடு சூப்பர் பாஸ்ட் ரயில் பழைய கட்டணம் அமுல்படுத்துதல் ,ரயில்வே நிலையத்தில் ஏடிஎம் மையம் வைத்தல் என கோரிக்கைகள் விடுத்தார். ஆலோசனைக்குழு உறுப்பினரின் கோரிக்கையை கரூர் ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் செல்வராசன் ரயில்வே துறையின் மேல் அதிகாரியில் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ராகினி, ஜெயபால், ராஜகோபால், ஞானபதி மற்றும் ரயில்வே காவலர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கரூர் ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் செல்வராசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை