உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேளாண்மை கருத்தரங்கம் கண்காட்சி நிகழ்ச்சி

வேளாண்மை கருத்தரங்கம் கண்காட்சி நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், முசிறி தனியார் வேளாண்மை கல்லுாரி மாணவிகள் சார்பில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், வேளாண்மை கல்லுாரி மாணவிகள் கருத்தரங்கம், கண்காட்சியை நடத்தினர். இதில் மண் மாதிரி, விதைகள், காய்கறி செடிகள், பழங்கள் மற்றும் வேளாண்மை தொடர்பான பயிர்கள் குறித்து, விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. கல்லுாரி முதல்வர் ரகுசந்தர், உதவி பேராசிரியர் சவுமியா, பஞ்சாயத்து தலைவர் செந்தில் வெண்ணிலா, வார்டு உறுப்பினர் பிராகஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை